Skip to main content

Posts

மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?

எல்லோர்க்கும் பொருந்தும் குறள் 24 "நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?" என்ற கண்ணதாசன் எழுதிய பாடலின் பொருள் என்ன? நினைக்கத் தெரிந்த மனதிற்கு ஏன் மறக்கத் தெரிந்திருக்க வேண்டும்? காதல் கைகூடாது என்று தெரிந்த காதலி காதலனைப் பற்றிய எண்ணம் முழுவதும் மறந்து போய் விடாதா? என்று ஏங்குகிறாள். அந்த எண்ணம்தானே படாத பாடு படுத்துகிறது. எப்போதுமே எதார்த்தமும் எண்ணங்களும் ஒன்றாக இல்லாமல் போனால் துன்பம்தான். எதார்த்தத்தை மாற்றுவது கடினம். அதை விட எதார்த்தத்தோடு பொருந்தாத எண்ணங்களை மறந்து விடுவது நல்லது. நினைவாற்றல் எந்த அளவிற்கு ஒரு மனிதனுக்கு முக்கியமோ அந்த அளவிற்கு மறதியும் சில நேரத்தில் நல்லதுதான். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் மருத்துவர்கள் கொடுக்கும் சில மாத்திரைகள் எண்ணங்களை சட்டென்று நிறுத்தி மூளையை அமைதிப்படுத்தி விடும்.  அது ஒரு விதமான மறதிதான், நாம் வளவளவென்று மனதிற்குள் பேசிக் கொண்டே இருக்கிறோம். அதுதான் நமது எண்ணம். அந்த எண்ணம் மௌனமானால் மனதுக்கு நிம்மதி.  சரி எதை எல்லாம் மறக்க வேண்டும்? எதுவெல்லாம் மனநிம்மதியைக் குறைக்கிறதோ குலைக்கிறதோ அதை எல்லாம் மறக்க வேண்
Recent posts

எப்போது உதவி செய்ய வேண்டும்?

எல்லோர்க்கும் பொருந்தும் குறள் 23 மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு. ஒருமுறை அர்ஜூனன் கண்ணனிடம், "கண்ணா எங்கள் அண்ணன் தர்மருக்கு பெயரிலேயே தர்மம் இருக்கிறது. அவர் தர்மத்தில் சிறந்தவர். அவரை விட கர்ணன் எந்த அளவிற்கு தர்மத்தில் சிறந்தவன். ஏன் அவனையே எல்லோரும் புகழ்கிறார்கள்?" என்று கேட்டானாம். அதைக் கேட்ட கண்ணன், "உனது சந்தேகம் நியாயம்தான். தானத்தில் தர்மன் சிறந்தவனா? கர்ணன் சிறந்தவனா? என்று சோதித்துப் பார்த்து விடலாம்" என்று சொன்னான். அந்த சோதனைக்காக ஒரு பெரிய மழையைப் பொழிய வைத்தான் கண்ணன். சமீபத்தில் வந்த மிக்ஜாம் புயல்போல, அத்தியாவசியப் பொருட்கள் எல்லாம் மழையில் நனைந்து விட்டன. அப்போது கண்ணனும் அர்ஜூனனும் தர்மனின் அரண்மனைக்குச் சென்றனர்.  "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டான் தர்மன். "மழையில் எங்கள் வீட்டில் வைத்திருந்த விறகு பூராவும் நனைந்து விட்டது. அடுப்பெரிக்க முடியாது. உணவு சமைக்க முடியாது. எனவே எங்களுக்கு விறகு வேண்டும்" என்று சொன்னான் கண்ணன். "நீங்கள் தங்கம் வைரம் என விலை உயர்ந்த பொருட்களைக் கூடக் கேளுங்கள் தருகிறேன். ஆனால் இந்த மழையி

கடுமையான சொற்கள் வேண்டாமே

எல்லோர்க்கும் பொருந்தும் குறள் 22 "கம்யூனிகேசன் ஸ்கில்லை வளத்துக்கங்க. அது எல்லாத்துக்கும் நல்லது. பெரிய கம்பெனியில வேலை கிடைக்கும். கிடைத்த வேலையில் புரமோஷன் கிடைக்கும். நீங்க எவ்வளவுதான் படிச்சிருந்தாலும் வேற எந்தத் திறமை இருந்தாலும் கம்யூனிகேசன் ஸ்கில் ரொம்ப அவசியம்" இப்படிப் பேசுவதை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். அது என்ன கம்யூனிகேசன் ஸ்கில்? சுருக்கமாகச் சொன்னால் நீங்கள் விரும்புவதை சாதூர்யமாகப் பேசி பிறரை இணங்க வைக்கும் திறமை.  செருப்புக் கடைக்குச் சென்றால், அங்கே இருக்கும் விற்பனையாளர் "இது உங்களுக்கு நல்லா இருக்கும்" என்று சொல்வதற்குப் பதில்... "இதை ஒரு முறை ட்ரை பண்ணிப் பாருங்க" என்று சொல்வது உங்களுக்குப் பிடிக்கும்தானே. இதுதான் பேசும் முறை. இந்த முறையில் திறமை மட்டும் இல்லை. மென்மையும் இனிமையும் இருக்கிறது. அது வேண்டும். பேச்சில் வலுக்கட்டாயம் கூடவே கூடாது. "இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கெலோ  வன்சொல் வழங்கு வது' என்கிறது குறள். இனிமையான சொற்கள் சந்தோஷத்தை வழங்கும் என்று தெரிந்தவன் ஏன் கடுமையான சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? என்று கேட்

இனிமையான பேச்சு ஒரு மேஜிக்

எல்லோர்க்கும் பொருந்தும் குறள் 21 பண நெருக்கடியில் நீங்கள் சிக்கி இருக்கலாம் அல்லது வீட்டில் உள்ளவர்களோடு முரண்பாடு ஏற்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கலாம் அல்லது சந்தர்ப்பவசத்தால் உங்களுக்குப் பிடிக்காத கல்லூரியில் அல்லது வேலையில் சேர நேர்ந்திருக்கலாம். இந்தப் பிரச்சனைகளை சிலரிடம் பகிர்ந்து கொள்ளும் போது உங்களுக்கு ஏதோ ஒரு பெரிய பாரம் இறங்கியது போலிருக்கும். உணர்ந்திருக்கிறீர்களா?. ஒரு ஆச்சரியம் என்னவெனில் அந்த நபர் உங்கள் பணப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் அளவிற்கு வசதி படைத்தவராக இருக்க மாட்டார் அல்லது திருமணம் குடும்பப் பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைக்கும் அளவுக்கு அனுபவம் இல்லாதவராக இருப்பார் அல்லது கல்லூரிப் படிப்பு குறித்து போதிய விபரம் தெரியாதவராகக் கூட இருப்பார். அவரிடம் உங்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொண்டால் உங்களுக்கு எப்படி பாரம் இறங்கும்? மேஜிக்கே  அதுதான். "கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகும்" என்று முகமலர்ச்சியோடு சொல்வார். அவ்வளவுதான். அந்த வார்த்தையே உங்களுக்குப் போதுமானதாக இருக்கும். அகமகிழ்வோடு எதையாவது கொடுப்பதை விட முக மலர்ச்சியோடு இ

விருந்தினரை வரவேற்று உபசரித்துப் பாருங்கள்

 எல்லோர்க்கும் பொருந்தும் குறள் 20 கவிஞர்களுக்கு ஒரு விஷயம் மிகவும் பிடித்து விட்டால் போதும், அதை மிகைப்படுத்திச் சொல்வது வழக்கம்தானே. வள்ளுவர் தனது விருந்தோம்பல் அதிகாரத்தில் விருந்தினர்களை வரவேற்று உபசரிக்கும் மகிழ்ச்சியான அனுபவத்தை விதவிதமாகக் கொண்டாடுகிறார். நீங்கள் குடும்பம் நடத்துவதே விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதற்காகத்தான் என்கிறார்.  "இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி  வேளாண்மை செய்தற் பொருட்டு" விருந்தினரை வெளியே காக்க வைத்து விட்டு தானாக எதையும் உண்ணக் கூடாது. அது சாவே வராத மருந்தாக இருந்தாலும் அவரை விட்டு விட்டுச் சாப்பிடுவது ஏற்கத் தக்கதல்ல என்கிறார்.  "விருந்து புறத்தாத் தானுண்டல் சாவா  மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று" தினந்தோறும் விருந்தினரை உபசரித்து மகிழ்பவரின் வாழ்க்கை அதனால் ஒன்றும் கெட்டுப் போய்விடுவதில்லை என்கிறார். "வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று" முக மலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்று உபசரிப்பவரின் வீட்டில் அக மகிழ்ச்சியோடு செல்வம் எனும் திருமகள் வசிப்பாள் என்கிறார். "அகனமர்ந்து செய்ய

சும்மா பேசிக் கொள்வது சும்மா இல்லை

எல்லோர்க்கும் பொருந்தும் குறள் 19 "ஹலோ" "சொல்லுங்க என்ன ரொம்ப நாளைக்கப்புறம் என்னோட நினைப்பு வந்து கூப்டுறீங்க..." "சும்மாதான் பேசி ரொம்ப நாள் ஆச்சேன்னு கூப்பிட்டேன் எப்படி இருக்கீங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?" "நல்லா இருக்காங்க நீங்க எப்படி இருக்கீங்க?" இப்படி ஆரம்பித்து இருவரும் சமீபத்தில் படித்த புத்தகம், பார்த்த சினிமா, கேட்ட இசை, போன கோவில் என்று  பல விஷயங்களைப் பரிமாறிக் கொள்வார்கள். இந்தப் பரிமாற்றத்தில் இருவரும் பணத்தைப் பற்றியோ வேறு ஏதேனும் தங்களின் தேவைகளைப் பற்றியோ உரையாடிக் கொள்வதில்லை. இப்படிப்பட்ட "சும்மா" உரையாடல்களில்தான் அன்பு படர்ந்திருக்கிறது.. ஆனால் இத்தகைய உரையாடல்கள் இப்போது பொதுவாகக் குறைந்து கொண்டே வருகிறது. "சும்மா" எதற்குப் பேச வேண்டும். ஏதேனும் தேவை இருந்தால் பேசலாம் என்ற நிலைமைக்கு வந்து விட்டோம். இன்னொரு விஷயம் அதற்கெல்லாம் இப்போது நமக்கு நேரமும் இல்லை. ஓடுவதற்காக சம்பாதிப்பதும் சம்பாதிப்பதற்காக ஓடுவதுமாக வாழ்க்கை எந்திரகதியாகி விட்டது. இப்போது எங்கே "சும்மா" பேசுவது? மனிதர்களுக

"பிரேக் அப்"பைத் தடுக்க அழகு மட்டும் போதாது

எல்லோர்க்கும் பொருந்தும் குறள் 18 படையப்பாவின் நீலாம்பரி ரம்யா கிருஷ்ணனிடம் "உங்களின் இளமையின் ரகசியம் என்ன?" என்று கேட்ட போது, "மனசை லேசாக வைத்திருப்பேன். எப்போதும் சந்தோஷமாக இருப்பேன்" என்றார்.  நாம் என்னதான் மேக் அப் போட்டாலும் நமது மனது எப்படி இருக்கிறதோ அதைப் பொருத்துத்தான் முகப் பொலிவு அமையும். மனதில் கோபமும் எரிச்சலும் நிறைந்திருந்து, எத்தனைதான் முகத்திற்கு பவுண்டேஷன் போட்டாலும், பிரயோஜனம் இல்லை. மனதில் அமைதி இருந்தால் பவுண்டேஷனோ பவுடரோ முக அழகை மேலும் கூட்டிக் காட்டும். மனம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க என்ன வழி? சிம்பிள். கோபமும் எரிச்சலும் எங்கிருந்து வருகிறது? ஏதோ ஒரு வெறுப்பில் வருகிறது. வெறுப்புக்கு எதிர்ச்சொல் எது? அன்பு. அன்பாக இருந்தால் மனம் அமைதியாகி விடும். மகிழ்ச்சியாகி விடும். முகம் பொலிவாகி விடும். அகத்தில் அன்பு இல்லாதவருக்கு முகம் போன்ற புற உறுப்புகளால் என்ன பயன் ? என்று கேட்கிறார் வள்ளுவர். “புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு” “அகத்தின் உறுப்பான மனதில் அன்பு இல்லாதவர்களுக்கு புற உறுப்புகள் என்ன பயனைத்